10th Tamil Assignment Answer key 2021
10ஆம் வகுப்பு ஒப்படைப்புக்கான விடைகள்(ஆகஸ்டு)
பகுதி-அ
1)பாண்டியன்
2)கால்டுவெல்
3)வணிகக்கப்பல்களும்,ஐம்பெருங்காப்பியங்களும்
4)துரை மாணிக்கம்
5)இளங்குமரனார்
6)கொழுந்தாடை
7)கூலம்
8)சிலேடை
9)பத்து
10)தெரிவுகள்(OPTIONS) தவறாக உள்ளன.சரியான விடை:இசைநிறை அளபெடை
பகுதி-ஆ
2) பூம்பிஞ்சு,பிஞ்சு,வடு,மூசு,கவ்வை,குரும்பை,முட்டுக்குரும்பை,இளநீர்,நுழாய், கருக்கல்,கச்சல்
4)எடுத்துக்காட்டு உவமை அணியை உரைநடையில் பயன்படுத்தும்போது இணை ஒப்பு என்கிறோம்.
5) வினையடியுடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர்.
பகுதி-இ
1) அ.அன்னை மொழியாக அழகாய் அமைந்து, பழமைக்குப் பழமையாய்த் திகழும் மொழி.
ஆ.குமரிக்கண்டத்தில் நிலைத்து நின்று, பாண்டிய மன்னனின் மகளாக திகழும் மொழி.
இ. தமிழிலக்கியங்கள் அனைத்தையும் தலையணிந்து விளங்கும் தமிழை வாழ்த்துகிறேன்.
2) முன்னுரை:
நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்கிறார் பாரதியார் கால வெள்ளத்தில் கரைந்து போன முலைகளுக்கிடையில் நீந்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது தமிழ். தமிழில் இல்லாத சொல் வளமும் இல்லை பொருள் வளமும் இல்லை அத்தகைய தமிழன் அது எத்தகைய சொல்வளத்தைப் பெற்று விளங்குகிறது? நமது செந்தமிழ் மொழிக்கு அனைத்து வளமும் உண்டு என்ற விடை பகர்கிறது தமிழ் சொல்வளம். அதைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
தமிழின் சொல்வளம்:
1)சொல்வளம் என்பது இலக்கியச்செம் மொழிகளுக்கெல்லாம் பொதுவாக இருந்தாலும் தமிழ் மட்டும் அதில் தலை சிறந்ததாகும்.
2)தமிழ் அல்லாத திராவிட மொழிகளின் அகராதிகளை ஆராயும்போது தமிழில் உள்ள ஒரு பொருட் பல வரிசைகளில் அவற்றில் இல்லாத குறை தெரிகிறது எந்தத் தமிழறிஞருக்கும் மிகத் தெளிவாகத் தோன்றும் செயல் இதுவாகும்.ஒரு மொழி பொது மக்களாலும்அதன் இலக்கிய மக்களாலும் அமையப்பெறும்.
3)தமிழ் பொதுமக்கள் உயர்ந்த பகுத்தறிவு உடையவர்கள் எத்தனையோ ஆராய்ச்சி நடந்து வரும் இக்காலத்திலும் எத்தனையோ மொழிகளில் நின்று கடன் கொண்ட ஆங்கில மொழியிலும் இலையைக் குறிக்க leaf என ஒரே ஒரு சொல் உள்ளது.
4)ஆங்கில நூல்களிலும் வேறு பல வகைகளில் இலைகளை பாகுபாடு செய்தனர் அன்றி தமிழ் பொது மக்களைப் போல வன்மை மென்மை பற்றி தாள், இலை, தோகை எனப்பாகுபாடு செய்யவில்லை.
5)இத்தகைய பாகுபாடு ஏனைய உறுப்புகளுக்குள்ளும் செய்யப்பட்டது இதில் இருந்தே தமிழின் சொல்வளத்தைத் தெளிவாக நம்மால் அறிய முடியும்.
புதிய சொல்லாக்கத்திற்கான தேவை:
1)மொழியுடன் இலக்கணம் நெருங்கிய தொடர்புடையது. சொல்லாக்கம் மரபிலே பணத்துடன் வேறுபடும் இடங்களை கண்டறிந்து புதிய இலக்கண விதிகளை வகுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
2)சொல்லாக்க அறிவானது அத்துறையில் வளர்ச்சிக்கும் மேலும் மொழியின் வளர்ச்சிக்கும் ஆதாரமாகும்.
3)உயர் கல்வியைத் தாய்மொழியில் பயிற்றுவிக்க நாடுகளில் சில ஆண்டுகளில் வீட்டு மொழியாகி விடும் என்று யுனெஸ்கோ கூறியுள்ளது.
4)உயர் கல்வியை தமிழில் கற்பித்தலுக்கான நிலையை ஏற்படுத்திய துறைதோறும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சொல்லாக்கங்கள் அடிப்படையாக விளங்குகின்றன.
5)தொன்மையான நம் தமிழ் மொழியானது எதிர்காலத்தில் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சினைகளை தகர்த்து காலத்துக்கு ஏற்றவாறு இளமையுடன் விளங்க வேண்டும் என்றால் சொல்லாக்க முயற்சிகள் தொடர்ந்து இடைவிடாமல் நடைபெற வேண்டியது அவசியம் என்று பாவாணர் தமது சொல்லாக்க உரையில் குறிப்பிட்டுள்ளார்.
முடிவுரை:
வணிகம் பொருளாதாரம் அரசியல் சமூகம் அரசு சார்ந்த துறைகள் அனைத்திலும் தமிழ் மொழியாக்கம் தகுந்த சொற்களை அமையவேண்டும் காலகட்டத்திற்கு ஏற்றவாறு தமிழ் மொழியும் நடை போடுவது அவசியம் புதிய சொல்லாக்கம் அழிந்து வரும் மொழிகளின் வரிசையில் இல்லாமல் எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல உதவும் என்பது உறுதி.